மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டப்பட்டது. அந்த சதித்திட்டத்தால் பயனடைந்தவர்கள் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதால் கவலையடைவது இயல்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கூறியுள்ளார்.
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமையானது, தவறாக வழிநடத்தப்பட்ட மத மூடவெறியால் சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்த ஒரு சாதாரண சம்பவம் மட்டுமல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்துக்காக திட்டமிட்டு பயன்படுத்திய சதித்திட்டம் என்ற பகிரங்க இரகசியத்துக்கு இது உத்தியோகப்பூர்வ அறிவித்தலாகும்.
ஆகவே அந்த அரசியல் சதியால் பயனடைந்தவர்கள் கவலை வெளியிடுவது இயல்பானதே என பதிவேற்றம் செய்தார்.


















