மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (ஊPஊ) உத்தரவிட்டுள்ளது.
நேர்மையற்ற நபர்கள் போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருளை எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும் வரை அத்தகைய கொள்கலன்களுக்கு எரிபொருளை வழங்க வேண்டாம் என்று அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் என்று அக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா கூறினார்.


















