இலங்கைக்கு வருகை தருமாறு திருத்தந்தை 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று முன்தினம் வத்திகானில் வைத்து இதற்கான அழைப்பிதழைப் ஒப்படைத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வத்திகானின் நாடுகளுடனான உறவுகளுக்கான பிரதிச் செயலாளர் அருட்தந்தை மிஹைடா பிளாஜிடம் இந்த உத்தியோகபூர்வ ஆவணம் கையளிக்கப்பட்டது.


















