நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் காரியங்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த தனிப்பட்ட உறுப்பினர்களின் முன்மொழிவுகளை வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக, 2026.02.28 ஆம் திகதியிடப்பட்ட 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனம் உள்ளிட்ட தீர்மானங்களை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பி.ப 5.00 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானங்களை விவாதமின்றி அங்கீகரிப்பதற்கும், அதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையிலான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் பாராளுமன்றம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இன்று புதன்கிழமையும், நாளை வியாழக்கிழமையும் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















