-விசேட பாதுகாப்பு அதிகரிப்பு-
இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள இடங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களை கருத்திக்கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் மற்றும் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 24 மணித்தியால பாதுகாப்பு சேவையை தற்போது வழங்குவதில் பொலிஸார் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. கொழும்பில், பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
அதன்படி, பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளையும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


















