இலங்கையின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 18 சதவீதம் பேர் இப்போது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், இது மக்கள்தொகை வயதான போக்கை தெளிவாக பிரதிபலிக்கிறது என்று இலங்கை மக்கள்தொகை சங்கத்தின் (PASL) தலைவர் பேராசிரியர் மனோரி வீரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இலங்கை மக்கள்தொகை அறிஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர மக்கள்தொகை மாநாட்டில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டில் மக்கள் தொகை அமைப்பு விரைவான மாற்றத்திற்கு உள்ளாகி வருவதால், மக்கள்தொகை சுகாதார மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
ஆயுட்காலத்தை அதிகரிப்பதில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், ஆரோக்கியமான ஆயுட்காலத்தை மேம்படுத்துவதற்கும், நாள்பட்ட தொற்றா நோய்களின் அதிகரித்து வரும் சுமையைக் கட்டுப்படுத்துவதற்கும் இப்போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இதற்கான ஒரு சீர்திருத்தம் நாட்டிற்கு அவசியம் தேவை. வலுவான நோய் கண்டறிதல் வழிமுறைகள், சுகாதார சேவைகளின் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

















