மத்திய அமைச்சு மற்றும் மாகாண அமைச்சுக்களில் நிலவும் 15,839 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் 30 அன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, பொதுச் சேவையின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை ஆய்வு செய்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது. அதிகப்படியான ஆட்சேர்ப்புக்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களில் இடம்பெறவுள்ளன.
இதன்படி வடமாகாணசபையில் 411 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், அவற்றுக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.
















