மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு தாக்குதலுக்கு உள்ளான கொக்குவில் மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் உள்ள வீடுகளை சோதனையிடும் நடவடிக்கை ஒன்றை நேற்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் மற்றும் மாநகரசபையினர், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.
மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழை பெய்தமையால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதற்கமைய கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் ஒவ்வொரு நாளும் 3 பேர் டெங்குவினால் பாதிக்கப்படுவதோடு, கொக்குவில் பிரதேசத்தில் 12 டெங்கு நோயாளர்களும் கோட்டமுனை பகுதியில் 6 டெங்கு நோயாளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.


















