களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
காணாமல் போனவர் வத்தளை – மாபோல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் இவர் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர் சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தடயவியல் விஞ்ஞான பீடத்தில் பயின்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கல்விசார் நடவடிக்கை ஒன்றிற்காக ஏனைய மாணவர்களுடன் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக அருகிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரின் உதவியுடன் கொஸ்கம பொலிஸார் இணைந்து, காணாமல்போன மாணவரை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


















