-பிரதி பொலிஸ்மா அதிபர் சேனாதீர-
எரிபொருள் விநியோகத்திற்கு ஞசு நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற குழப்பம் மற்றும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. ஞசு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்தந்த வாகன வகைகளுக்கு ஏற்பத் தேவையான எரிபொருள் அளவு முறையாக வழங்கப்படும்.
மக்கள் காட்டும் தேவையற்ற அவசரமே எரிபொருள் நிலையங்களில் இவ்வளவு கூட்ட நெரிசலுக்குக் காரணமாகியுள்ளது. பொதுமக்கள் அமைதி காத்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது. 10 லீற்றர் தேவைப்படும் இடத்தில் 50 லீற்றர் அடிக்க முற்படுகிறார்கள்.
இவை அனைத்தும் அவசரப்படுவதால் ஏற்படும் விளைவுகள். யுத்த நிலைமை காரணமாகக் கொண்டு வரப்பட்ட ஒரு முகாமைத்துவமே இது. உங்கள் வாகனத்திற்குத் தேவையான எரிபொருளை எந்தவொரு நிலையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, வீதி நெரிசலைக் குறைக்கவும் ஒழுங்கைப் பேணவும் போக்குவரத்துப் பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.


















