-அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம்-
இந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கு அனுமதிகோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இந்தியா மற்றும் ரஷ்யாவுடன் நேரடி இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை இலங்கை முன்னெடுத்துள்ளது.
வழமையான கேள்விப்பத்திர நடைமுறைகளைத் தவிர்த்து, அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) உடன்படிக்கையின் கீழ் இந்த எரிபொருள் கொள்வனவை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா – ரஷ;யா சாதகமான பதிலை, வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்தபடியாக ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்களை எந்த நாணய அலகில் மேற்கொள்வது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.


















