நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலதிகமாக கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் இதுவரை ஒரு மணிநேரம் கூட மின்சாரத்தை துண்டிக்காமல் நிலைமையை முகாமைத்துவம் செய்து வருகிறோம். ஆனால் வரும் காலத்தில் சில நேரங்களில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றார்.


















