ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலின் ‘channel 12’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் முடிவுகள் குறித்து அதிகாரிகள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


















