மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் – கொழும்பு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

















