களனி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 01 கிலோகிராம் 36 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அத்துடன், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 190,000 ரூபாய் பணமும், ஒரு நவீன ரக கைபேசியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் விசாரணை முடிந்த பின் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


















