மக்கள் தங்களின் பிரச்சினைகளை நேரடியாக தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, விவசாயம், கால்நடை வளம், காணி மற்றும் நீர்ப்பாசன, மகாவலி அமைச்சின் கீழ் காணப்படும் பிரச்சினைகளை அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் நேரடியாக தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 071 2473104 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு Whatsapp செய்தி ஊடாக பிரச்சினைகளை தெரிவிக்க முடியும். இது தொடர்பில் அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


















