எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையாளர்களின் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றுநிரூபத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அரசஅதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


















