-சந்தை வர்த்தகர்கள் சுட்டிக்காட்டு-
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்த்தர்கள் கூறினர்.
தமிழ் – சிங்கள புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இயல்பானது என்றாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர்ச் சூழலின் தாக்கத்தால் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.
இத்தகைய பின்னணியில், நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளன.
முன்னர் ரூ.230 முதல் 240 வரை விலை இருந்த ஒரு கிலோ பருப்பு, தற்போது ரூ.310 முதல் 315 வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், தம்புள்ளை தனியார் மொத்த விற்பனை சந்தை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சில சந்தைகளில் ஒரு கிலோ பருப்பு ரூ. 350 முதல் 360 வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


















