-அறிவித்தது இலங்கை மத்திய வங்கி-
இலங்கை மத்திய வங்கியின் முனிப்பணக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், கொள்கை வட்டி வீதங்களை மாற்றமின்றி அதே மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒரு நாள் கொள்கை வட்டி வீதம் 7.75மூ என்ற மட்டத்தில் மாற்றமின்றித் தொடரும்.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் சூழலால் உருவாகியுள்ள நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தரவுகள் மற்றும் நிலவும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற் கொள்ளும் போது, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 5மூ என்ற இலக்கை அடையும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், நடுத்தர காலத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


















