-ஒப்புக்கொண்டார் அமைச்சர் பிமல்-
இலங்கைக்கு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை உண்மை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதற்கு காரணமான நிறுவனம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மீதான ஆய்வகப் பரிசோதனைகள் தரம் குறைந்தவை என நிரூபித்ததை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போதுமான கையிருப்பை பராமரிக்க, நிலக்கரி ஒப்பந்தப்புள்ளிகள் ஒரு சிக்கலான செய ல்முறையை உள்ளடக்கியுள்ளன என்றும், அவற்றை கவனமாகக் கையாளவேண்டும். இ ந்த சூழ்நிலையில் அபராதம் மட்டுமே விதிக்க முடியும்.
நான் தவறை நியாயப்படுத்தவில்லை, ஆனால் எங்களிடம் எந்தப் பொருளும் உபரியாக இல்லை. முற்பதிவு செய்யும் நடைமுறைக்கு மாதங்கள் ஆகும் என்பதால், இந்த நேரத் தில் எங்களால் நிறுவனத்தை மாற்ற முடியாது.
நியாயமற்ற அபராதம் காரணமாக நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவித்தால், அது எங்க ள் நிலக்கரி விநியோகத்தைப் பாதகமாகப் பாதிக்கும், என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


















