மின் பிறப்பாக்கிகள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த விடயத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, வாகனங்கள் அல்லாத வகைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வரும் வாரத்தில் அதிகரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். எரிபொருள் நிலையங்களில் கியூ.ஆர் குறியீட்டைக் காண்பிப்பதன் மூலம் அவர்கள் எரிபொருளைப் பெற முடியும். நாளை மறுதினம் திங்கட்கிழமை, இந்த வகையின் கீழ் எரிபொருளைப் பெறுவதற்கான நடைமுறையை நாங்கள் தெளிவாக விளக்குவோம், என்று சுமுது ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து அரசாங்கம் கியூ.ஆர் முறைமையை அறிமுகப்படுத்தி எரிபொருள் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















