ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க் – கம்சாட்ஸ்கி 5.1 ரிச்டர் அளவில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பம் அந்நாட்டு நேரப்படி காலை 07.17 மணிக்கும் பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி கம்சாட்ஸ்கி பகுதியிலிருந்து தென்கிழக்கே 144 கிலோ மீற்றர் தொலைவில் 25 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலைக்கொண்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (29) ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிச்டர் அளவில் பூகம்பம் பதிவானது.
பசுபிக் தகடு ஓகோட்ஸ்க் தகடுக்கு அடியில் சரியும் பாரிய துணை மண்டலத்தில் டெக்டோனிக் தகடு நகர்ந்தமையினால் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த மண்டலம் பசிபிக் எரிமலை வளையத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். பூகம்பங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளுக்கு ஒரு மையமாக உள்ளது.
8.8 ரிச்டர் அளவிலான பூகம்பத்தின் போது கடற்பரப்பின் செங்குத்தான இடம்பெயர்ந்ததால் சுனாமி அலை தாக்கியது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல பசிபிக் நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகளை ஏற்படுத்தியது.
அத்தோடு, கம்சட்காவில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 3 ஆம் திகதி முதல் குமுறத் தொடங்கியுள்ளது. பூகம்பத்தை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.


















