-சொ.வர்ணன்-
வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகள் மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை மேற்படி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழ எழுத்துமூலமாக அழைத்துள்ளது.


















