ஹொரணை – அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இல்லத்தின் பணிப்பாளர், ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், அவர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கான பயணத்தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இதேவேளை இந்த வழக்கு எதிர்வரும் 2026 ஜூன் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
















