குருக்கட்டு வீதி,துன்னாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முசுகுந்தசக்கரவர்த்தி நவரத்தினராசா அவர்கள் 2026.06.21 ஆந் திகதி இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான முசுகுந்தசக்கரவர்த்தி செல்வரத்தினம(திரவியம்) ஆகியோரின் ஏக புதல்வனும் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து ஆகியோரின் மருமகனும் காலம் சென்ற பரமேஸ்வரி (பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும் காலம் சென்றவர்களான செல்லம்மா (சிவமணி), இராசம்மா(இராசமணி) மற்றும் தெய்வானைப்பிள்ளை (ஈஸ்வரி,இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும் செல்வச்சந்திரன் (கணக்காளர்,இங்கிலாந்து) செல்வராணி (ஓய்வு நிலை ஆசிரியை,கொ/ ரி.பி.ஜாயா ஷாகிராக் கல்லூரி ஜெயச்சந்திரன் (பொறியியலாளர், அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் வசி (இங்கிலாந்து) அமரர் உதயகுமார் (உதவிப் பொலிஸ் பரிசோதகர்) சூரியப்பிரபா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கவினியா (இங்கிலாந்து), கார்த்திக் (இங்கிலாந்து), ரமேஸ்குமார் (அவுஸ்ரேலியா) ஷட்சாயினி (அவுஸ்ரேலியா) பிரணவன் (சிங்கப்பூர்) மேகலா (சிங்கப்பூர்) ஆத்மி (அவுஸ்ரேலியா),ஆகாஸ் (அவுஸ்ரேலியா ஆகியோரின் அன்புப் பேரனும் பிரகவி (சிங்கப்பூர்), கவிலோகன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை (2026.06.24) புதன் கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக மு.ப 10.00 மணிக்கு கியான்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
குருக்கட்டு வீதி,
துன்னாலை கிழக்கு,
கரவெட்டி.
தகவல் குடும்பத்தினர்
0777257401

















