சங்கரப்பிள்ளை அம்மையப்பர்
பிறப்பு : 18/01/1932 – இறப்பு : 20/06/2026
(அகில இலங்கை சமாதான நீதவான், முன்னாள் எழுதுவினைஞர் மோட்டார் போக்குவரத்து திணைக்களம், ஓய்வுபெற்ற ஆசிரியர் யா/வட்டு இந்து கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பரந்தன் குமரபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், ஓய்வு பெற்ற உப அதிபர் யா/அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் )
யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வடக்கு வீடு அராலி தெற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை அம்மையப்பர் அவர்கள் கடந்த (20.06.2026) சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை மற்றும் காரைக்காலம்மையார் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் பர்வதவர்த்தினி ஆகியோரின் அன்பு மருமகனும், சிதம்பரவல்லியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அன்னபூரணி, காலஞ்சென்ற சம்பந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரரும். காலஞ்சென்ற வைத்திலிங்கம், மேரி, காலஞ் சென்ற மங்கையற்கரசி, காலஞ்சென்ற அரிச்சந்திரன், சங்கரப்பிள்ளை, அபிராமி, குமாரசாமி, சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் சந்திரா, சிவகுமாரன், சித்திரா, கௌரி, காலஞ்சென்ற சிவநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கோபால் சங்கரப்பிள்ளை, தயாபரி, சர்வானந்தன், தேவசேனாதிபதி ஆகியோரின் அன்பு மாமனாரும், விநோதன், வாணி-நீல், அரன், சிவகரன், சிவஜீவன்- ஜயனி, சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேரனாரும், ஆஷா, டிலான் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (23.06.2026) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக 10.30 மணியளவில் அராலி தெற்கு, பூனாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்.
வடக்கு வீடு,
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை.


















