2026ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) வெள்ளிக்கிழமை நிறைவடையும்.
முஸ்லிம் பாடசாலைகளின் முதல் கட்டம் எதிர்வரும் செப்டம்பர் 02ஆம் திகதி புதன்கிழமை நிறைவடையவுள்ளது.
அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

















