அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று மேலும் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 329.30 ரூபாயில் இருந்து 329.65 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 339.06 ரூபாயில் இருந்து 339.49 ரூபாயாக அதிகரித்துக் காணப்படுகின்றது.
அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய சில முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

















