அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனாதிபதி Donald Trump தனது படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த “தேசபக்தர் பாஸ்போர்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ள சிறப்புப் பதிப்பின் மாதிரிப் படத்தை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் படம் அதிகாரப்பூர்வ பயண ஆவணத்தில் இடம்பெறுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.
பாஸ்போர்ட்டின் முதற்பக்கத்தில் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் பின்னணியில் ஜனாதிபதி ட்ரம்ப் மேஜையருகில் நிற்கும் கம்பீரமான புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதற்குக் கீழே அவரது கையெழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
அடுத்தப் பக்கத்தில் ஓவியர் John Trumbull வரைந்த புகழ்பெற்ற “சுதந்திரப் பிரகடனம்” ஓவியம் மற்றும் “America 250” வாசகமும் இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட் வெளியிடப்படுவதாக The White House தெரிவித்துள்ளது.

















