இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆன்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியின் 4 ஆம் நாளில், 318 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி, வெறும் 101 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இதில் அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 43 ஓட்டங்களை எடுத்தார்.
முக்கியமாக சிறப்பாகப் பந்து வீசிய மூத்த வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் 4 விக்கெட்டுகளை (4/51) வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் தனது 300 ஆவது விக்கெட்டை எட்டினார். இச்சாதனையைப் படைக்கும் 5 ஆவது மேற்கிந்திய வீரர் இவராவார்.
இந்நிலையில், இளம் வீரர் ஜெய்டன் சீல்ஸ் 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஓராண்டுக்கு முன்பு தலைவராக பொறுப்பேற்ற பிறகு ரோஸ்டன் சேஸ் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
மேலும்,இது மேற்கிந்திய தீவுகள் அணியின் வரலாற்றில் 2 ஆவது மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாகும். மேலும், 17 மாதங்களுக்குப் பிறகு அந்த அணி பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

















