அமெரிக்காவில் நடைபெற்று வரும் 4ஆவது மேஜர் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியின் 25 ஆவது லீக் ஆட்டத்தில், எம்.ஐ.நியூயோர்க் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதியுள்ள நிலையில், நியூயோர்க் அணி அபார வெற்றி பெற்றுள்ளது
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சியாட்டில் அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்துள்ளது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய நியூயோர்க் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சியாட்டில் அணி, நியூயோர்க் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய நிலையில்,நியூயோர்க் அணியின் ஷெபர்டு மற்றும் போலர்டு தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இறுதியில் சியாட்டில் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன் மூலம் சியாட்டில் அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.ஐ. நியூயோர்க் அணி அபார வெற்றி பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


















