கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, லியோனல் மெஸ்ஸி ஆர்ஜென்டினா ரசிகர்களுக்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த லியோ மெஸ்ஸியின் கடிதத்தில்,
“துயரம் அளப்பரியது, இந்தக்காயம் ஆறுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால், அனைத்து நல்ல விஷயங்களையும், எங்களது முழுமையான முயற்சியால் நாங்கள் திருப்பியமைத்த அனைத்துப் போட்டிகளையும், எங்களது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் தருணங்களையும் நான் நினைவில் கொள்ள விரும்புகிறேன்.
இந்த அணியின் உழைப்புடனும் முயற்சியுடனும் இணைந்து, நம்மை மீண்டும் ஒருமுறை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக மாற்றிய ஒட்டுமொத்த நாட்டின் ஆதரவை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். இன்று, நாங்கள் சாதித்ததை மதிப்பிடுவது கடினம்…
ஆனால், இந்த அணி தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை அடைந்துள்ளது. ஒவ்வொரு வாழ்த்துக்கும், ஒவ்வொரு செய்திக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள். மீண்டும் ஒருமுறை, நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து, ஆர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையைப் பகிர்ந்து கொண்டோம். உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயினுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”


















