அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அடுத்தவாரம் சந்திக்ககூடும் என வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து இறுதிமுடிவெடுக்கப்படவில்லை, சந்திப்பிற்கான இடம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரியொருவர் இதனை தெரிவித்தார் என அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரம்ப் ரஸ்ய உக்ரைன் ஜனாதிபதிகளை சந்திப்பதற்கு தயார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஸ்ய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் டிரம்ப் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு இடம்பெற்றால் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டிரம்ப் புட்டினை சந்திப்பது இதுவே முதல்தடவையாக அமையும்.
உக்ரைன் ரஸ்யா இடையிலான 3 வருட யுத்தத்தில் இது முக்கியமைல்கல்லாக விளங்கும்.
இதேவேளை செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இந்த சந்திப்பு எங்கு இடம்பெறும் என்பது குறித்து பதிலளிக்காத அமெரிக்க ஜனாதிபதி புட்டினினுடான சந்திப்பிற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.

















