தேவேந்திரமுனை (Devinuwara) ஸ்ரீ விஷ்ணு மகா ஆலயத்தின் வருடாந்த ஊர்வலத்தில் பங்கேற்க வந்த காவடி நடனக் குழுவைச் சேர்ந்த ஒருவரை போதைப்பொருளுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து வருகை தந்த குறித்த நபர், ஊர்வலத்தில் மேள வாத்தியக் கலைஞராகச் செயற்பட்டு வந்த நிலையில், இன்று (28) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
வருடாந்த ஊர்வலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 1,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

















