கனமழை காரணமாக சிவனொளிபாத மலை உச்சிப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சிவனொளிபாத யாத்திரைப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சிவனொளிபாத யாத்திரைக்குச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள், இடிக்கட்டு பஹானா வழியாக இரத்தினபுர வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நிலவும் மோசமான வானிலை சீரடைந்த பின்னர், பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் செடிகளை அகற்றி வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நல்லதண்ணிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















