யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
இன்று 10 ஆம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடச்சபைக் கூட்டத்தில் நடாத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 15 வாக்குகளால் முன்னிலை பெற்றுப் பேராசிரியர் பி. பிரதீப்காந் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் ந.கெங்காதரனின் பதவிக்காலம் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (திருத்தப்பட்ட) படி புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று காலை இடம்பெற்ற தெரிவுக் கூட்டத்தில் பேராசிரியர்
பி. பிரதீப்காந் எதிர்வரும் 15.08.2026 முதல் செயற்படும் வகையில் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


















