கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.Geographic Reference
இதன்போது, இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை ஒன்றையும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.


















