தீவகத்தின் பிரமாண்ட கிரிக்கெட் தொடரான ஸ்ரீ முருகன் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில் காவலூர் சிறுத்தைகள் விளையாட்டு கழகம் சம்பியனாகி அசத்தியது.
26 விளையாட்டுக்கழகம் பங்கேற்ற இப் போட்டித் தொடரில் நயினை மத்திய அணி முதல் அரையிறுதி போட்டியில் சிறபனை ஸ்ரீமுருகன் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது காலிறுதியில் அனலைதீவு லக்கி ஸ்ரார் அணியை 37 ஓட்டங்களால் வெற்றி கொண்டு காவலூர் சிறுத்தைகள் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
எட்டுப் பந்துப் பரிமாற்றங்ளை கொண்ட இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியல் வெற்றிபெற்ற காவலூர் சிறுத்தைகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நயினை மத்திய அணி காவலூர் சிறுத்தைகளின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து 8 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 24 ஓட்டங்களை பெற்றது.
அடுத்து 25 என்ற இலகுவான இலக்கை நோக்கிய துடுப்பெடுத்தாடிய காவலூர் சிறுத்தைகள் அணி 1.3 ஓவர்களில் 27 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்று சம்பியனாகியது.
போட்டியின் ஆட்டநாயகன் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக காவலூர் சிறுத்தைகள் அணி வீரர் யே.மில்ரன் ஜெலைக்ஸ்ரன் தெரிவானார். சிறந்த துடுப்பாட்டவீரர், தொடர் ஆட்ட நாயகனாக யூட் விக்ரர் தெரிவானார். வெற்றிபெற்ற அணிக்கு 3 இலட்சம் பணப்பரிசிலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது. இரண்டாவது இரண்டாம் பிடித்த நயினை மத்தி அணிக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வெற்றிகிண்ணமும் வழங்கப்பட்டன.






















