யாழ்ப்பாணம், நாவற்குழி – சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் ‘Clean Sri Lanka’ (சுத்தமான இலங்கை) ஆகியவற்றுடன் இணைந்து, SCJ தன்னார்வலர் குழுவின் பங்கேற்புடன் நாவற்குழி பகுதியில் சமூகச் சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன், அரசாங்க பிரதிநிதிகள், சமூகத் தன்னார்வலர்கள் மற்றும் பொதுச்சேவைப் பணியாளர்களை ஒன்றிணைத்து இத்திட்டம் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இச்சுத்திகரிப்புத் திட்டத்தில் SCJ தன்னார்வலர் குழுவைச் சேர்ந்த 22 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்; மேலும், 150 கிராம மக்கள் இதில் ஒன்றுகூடினர். சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் ‘Clean Sri Lanka’ அமைப்பின் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்கள், பொது இடங்களைச் சுத்தம் செய்வதிலும் சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காகவும் உற்சாகமாக பணியாற்றினர்.
இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றமை, சமூகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்கியது.

SCJ தன்னார்வலர் குழுவின் பங்கேற்பானது, சமூக சேவையின் பொருட்டு அக்குழுவின் அர்ப்பணிப்பையும், உள்நாட்டு சமூகத்திற்குப் பயனளிக்கும் முயற்சிகளில் பங்களிப்பதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது. இச்செயல்பாட்டின் மூலம்,
தன்னார்வலர்கள் உள்நாட்டு அரச பிரதிநிதிகள் மற்றும் பிற பங்கேற்பு அமைப்புகளுடன் ஒத்துழைப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் இணைந்து செயல்பட முடிந்தது. இந்நிகழ்ச்சியானது SCJ தன்னார்வலர் குழு, சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் ‘Clean Sri Lanka’ அமைப்பு ஆகியவற்றிற்கு
இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியது. பங்கேற்ற குழுக்களிடையே இடம் பெற்ற கலந்துரையாடல்கள், எதிர்காலத்தில் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த முயற்சிகளில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியப்பாட்டினை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

தூய்மையான சூழலைப் பேணுவதில் கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியது. அரச நிறுவனங்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், தன்னார்வக் குழுக்கள் மற்றும் சமூக அங்கத்தவர்கள் பங்கேற்றமையானது, பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, எவ்வாறு தூய்மையான மற்றும் நிலைபேண்தகு சமூகத்தை உருவாக்க உதவும் என்பதை எடுத்துக்காட்டியிருந்தது.
அர்த்தமுள்ள சமூகசேவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்பதற்கும், சமூகத்தின் மேம்பாட்டிற்காக உள்ளூர் சமூகத்தை சேர்ந்த மக்களோடு இணைந்து பணியாற்றுவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக SCJ தன்னார்வலர் குழுவினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















