கிளிநொச்சி, முரசுமோட்டை பகுதியில் வீட்டின் முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன், அதன் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனும் அவரது சகோதரனும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, உறவினர் ஒருவர் உழவு இயந்திரத்தை இயக்கி முன்றலில் திருப்ப முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்த சிறுவன், அதன் பின்சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தையடுத்து உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

















