கொழும்பு: SAARC Human Rights Foundation – Sri Lanka Chapter ஏற்பாடு செய்த மாவட்டத் தலைவர்களின் பிரதிநிதிகள் கூட்டம் மற்றும் அமைப்பின் இரு வருட இதழான Bi-Annual Magazine வெளியீட்டு விழா கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பு YMBA வளாகத்தில் அமைந்துள்ள Ruhunu Food Center இல் இடம்பெற்ற இந்நிகழ்வில், SAARC Human Rights Foundation அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட தலைவியாக திருமதி ம. நிர்மலா நியமிக்கப்பட்டார்.
இதன்போது, அவருக்கான அமைப்பின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டையும் நியமனக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பங்களாதேஷைச் சேர்ந்த SAARC Human Rights Foundation இன் மத்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் Abed Ali சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், அமைப்பின் தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக நீதியை மேம்படுத்துதல், பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளை முன்னிறுத்துதல், பெண்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக திருமதி ம. நிர்மலா தெரிவித்தார்.
அத்துடன், சமூக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
திருமதி ம. நிர்மலாவின் இந்த நியமனம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மனித உரிமைகள், சமூக நீதி, சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கியமான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















