ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் (Mohsen Paknejad) தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக அரசுக்குச் சொந்தமான ‘நேஷனல் ஈரானியன் ஆயில் கம்பெனியின் (National Iranian Oil Company) தலைமை நிர்வாக அதிகாரியான ஹமீத் போவார்ட் பொறுப்பு அமைச்சராகச் செயல்படுவார் என்றும் ஈரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏழு மாதங்களாக நீடிக்கும் போர் அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பதவி விலகல் வந்துள்ளது.
OPEC உறுப்பு நாடான ஈரானின் எண்ணெய் அமைச்சராக 2024 ஆகஸ்ட் முதல் மொஹ்சென் பக்நெஜாத் பதவி வகித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















