சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சிலாபத்தை சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
சந்தேக நபரான வர்த்தகர் டுபாயிலிருந்து நேற்றைய தினம் காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரான வர்த்தகர் விமான நிலையத்தை விட்டு வெளியே முயன்ற போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்பொது சந்தேக நபர் கொண்டு வந்த வாகன உதிரி பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூபா 11.5 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய 03 கிலோ 266 கிராம் நிறையுடைய 28 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


















