ஷிரந்தி ராஜபக்ஷ எமது கட்சி உறுப்பினர் அல்லர் என, ஶ்ரீ லங்க பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, மஹிந்த கஹந்தகமவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் அல்ல என, நேற்று முன்தினம் சாகர காரியவசம் மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கட்சியிலிருந்தே அவர் வேட்புமனுப் பெற்று வந்தவர் எனவும், மஹிந்த கஹந்தகம பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லர் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















