2025 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய விண்கல் மழை பொழிவு இன்று செவ்வாய்க்கிழமை (12) நள்ளிரவு முதல் நாளை புதன்கிழமை (13) அதிகாலை வரை தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்தார்.
இதுதொடர்பில் விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர,
பெர்சீட் விண்மீன் தொகுப்பில் இந்த விண்கல் மழை ஏற்படுவதால் இது “பெர்சீட்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நாளை புதன்கிழமை (13) அதிகாலை 5:00 மணியளவில் வடக்கு வான் பகுதியில் சிறப்பாக தென்படும்.
இந்த விண்கல் மழையின் சிறப்பு என்னவெனில் ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்பதாகும். இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்,
பெர்சீட் விண்மீன் கூட்டம் நள்ளிரவில் அடிவானத்திற்கு மேலே தோன்றத் தொடங்கி, அதிகாலை வரை மேல்நோக்கி நகரும்.
இந்த விண்கல் மழையைப் பார்க்க சிறந்த நேரம் அதிகாலை 5 மணியளவாகும். அப்போது வடக்கே பார்த்தால்இ ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்று அவர் தெரிவித்தார்.
பெர்சீட்ஸ் விண்கல் மழை ஆண்டின் பிரகாசமான மற்றும் மிகவும் பிரபலமான விண்கல் மழைகளில் ஒன்றாகும்.
இந்த வருடாந்திர மழை ஜூலை மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் பிற்பகுதி வரை தொடர்ந்து நீடிக்கும். ஆனால் இன்றும் நாளையும் உச்சத்தை எட்டும். வானிலை அனுமதித்தால், நட்சத்திர பார்வையாளர்கள் மணிக்கு 60 முதல் 100 விண்கற்கள் வரை காண முடியும்.
பெர்சீட்ஸ் விண்கல் மழை ஸ்விஃப்ட்-டட்டில் வால்மீனால் ஏற்படுகிறது. இந்த வால்மீன் பூமிக்கு அருகில் மீண்டும் மீண்டும் கடந்து செல்லும் மிகப்பெரிய பொருளாகும், அதன் கரு சுமார் 16 மைல் அகலம் கொண்டது என நாசா தெரிவித்துள்ளது.


















