உக்ரேனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த ஏவுகணைகள் மிக அவசியமானதாக கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த ஏவுகணைகள் நாட்டை வந்து அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நவீன ரக PAC-3 இடைமறிப்பு ஏவுகணைகளின் மதிப்பு 2.1 பில்லியன் டொலர்கள் (1.6 பில்லியன் பவுண்டுகள்) என்றும், இதற்கான செலவு முழுவதையும் ஐரோப்பா மற்றும் கனடாவில் உள்ள உக்ரேனின் நட்பு நாடுகள் ஏற்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (30) இரவு, ரஷ்யாவின் அபாயகரமான ஏவுகணைகளை வீழ்த்தக்கூடிய ஒரே பயனுள்ள ஆயுதமான ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணை அமைப்புகளை அமெரிக்கா விரைவாக வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை செலன்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினார்.
ரஷ்ய டீசலைப் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்தியபோது, இந்த மாத தொடக்கத்தில் ஜெலென்ஸ்கிக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பின்னர் இந்த அண்மைய நடவடிக்கை வந்துள்ளது.
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு, உக்ரேனுக்கு ஒரு புதிய தலைவர் தேவைப்பட வேண்டிய நேரம் இது என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
கிழக்கில் கிரிமியா மற்றும் டான்பாஸின் சில பகுதிகளைக் கைப்பற்றியிருந்த மொஸ்கோ, 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது ஒரு முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.


















