யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையின் கட்டடப் புண்ணிய உற்சவம் மற்றும் மதிய நேர அன்னதான நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை வளாகத்தில் நடைபெற்றது.
விகாராதிபதி கல்யாணி மகா சங்கத்தேரோ ஸ்ரீ விமலதேரர் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி , யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச செயலர் ஆகியோர் பங்கேற்றனர்.


















