பாடசாலைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுவரும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்று (26) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றன.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர். எம். பாலித சேனவிரத்னவின் வழிகாட்டலில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜெமகால் அவர்களின் மேற்பார்வையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நாள் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினரால் குறித்த மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.





















