யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிமுகமும் இடம்பெற்றது.
தொடர்ந்து, மதத் தலைவர்களின் ஆசியுடன் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


















