சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே!
வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.


















